சேலத்தில் ஏரியில் குளிக்க சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி அநியாயமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கன்னகுறிச்சி பகுதியில் உள்ள புது ஏரியில் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பிரசாத் மற்றும் பாலாஜி இருவரும் ஏரியின் ஒரு பகுதி சேற்றில் சிக்கி தவித்துள்ளனர். இதனைக் கண்ட மற்றொரு மாணவன் பயத்தில் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சேற்றில் சிக்கிய மாணவர்களை காப்பாற்றும் முயற்சி ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சடலமாக தான் மீட்கப்பட்டனர். உடனே போலீசார் உயிரிழந்த மாணவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.