அரசுப் பள்ளி ஒன்றில் ஆபாச படத்தை திரையிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் சில ரயில் நிலையங்களில் இருக்கும் எல்சிடி திரையில், ஆபாச படம் ஒளிபரப்பானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது போன்ற சம்பவம் அரசுப் பள்ளி ஒன்றிலும் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் கபுர்தலாவில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் தனது போனை எல்சிடி திரையுடன் இணைத்து பாடம் சம்பந்தமான வீடியோக்களை ஒளிபரப்பி வந்துள்ளார். அப்போது, திரையொல் ஆபாச படம் வெளியாஒளிபரப்பானதால் பரபரப்பு எழுந்துள்ளது.
இது மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியவந்த நிலையில், பள்ளியை முற்றுகையிட்டனர். இது குறித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆசிரியரைக் கைது செய்தனர்.