
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆனது கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக எதிர்பார்ப்பு நிலவியது.
அதன் படி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் நீண்ட காலமாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இருப்பினும் இதில் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் என்பதை விட, தகுதி வாய்ந்தவர்கள் என்றே கூறப்பட்டது.
இந்நிலையில், இது சரியானதல்ல என எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று சட்டப்பேரவையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி அவர்கள் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த உரிமைத் தொகையை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதிலிருந்து, மாதம் ரூ.1000 வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கிடைக்கிறது.