மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2000.. அரசின் அதிரடி அறிவிப்பு….!

By Gowthami Subramani Updated on :
மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2000.. அரசின் அதிரடி அறிவிப்பு….!Representative Image.

மாதந்தோறும் மகளிருக்கு ரூ.2000 வழங்கப்படுவது குறித்து காங்கிரஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என கர்நாடக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல், வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் ரூ.2000 குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும்.

மேலும், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,ஸ்வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியத்தையும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.3000 நிதி உதவி போன்றவை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளவும் விவசாயக்கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்பான செய்திகள்