தமிழகத்தின் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இதனால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியை இருக்கின்றனர்.
தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏற்கனவே முடிந்து விட்டது. ஆனால் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் முதல் பொதுத்தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழக அரசு திட்டமிட்ட படி, ஏப்ரல் 28 ஆம் தேதி நடப்பு கல்வி ஆண்டின் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.