
கோவையில் குற்றவியல் நீதிமன்றத்தில் அதிகப்படியான ஆள் நடமாட்டம் இருக்கும் போதே பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் அடுத்தடுத்து நடந்து வரும் கொடூர சம்பவங்களுள் நேற்று நடந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் கவிதா என்ற பெண் மீது அவரின் கணவர் சிவகுமார் ஆசிட் வீசியுள்ளார். தன் மீது ஆசிட் பட்ட உடன் வழியால் துடித்து அலற ஆரம்பித்துள்ளார் கவிதா. சத்தம் கேட்ட உடன் அருகில் இருந்த வளக்கறிஞர்கள் சிவகுமாரை சரமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் வழியில் துடிக்கும் காவியாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிவகுமாரை வழக்கறிஞர்களிடம் இருந்து கைப்பற்றி விசாரணைக்கு அழைத்துச் செல்ல போலீசார் முயற்சித்தனர். ஆனால் பெண் மீது இரக்கமே இல்லாமல் ஆசிட் வீசியவனை ஏன் காப்பாற்றுகிறீர்கள் என்று போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் விசாரணையில் தெரிய வந்தது என்னவென்றால், கவிதா மற்றும் சிவரகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர் சிவகுமார் மீது காவிய புகார் அளித்துள்ளார். தன் மீது மனைவி புகார் அளித்ததால் மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார் சிவகுமார்.
இந்த வழக்கு கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வருகிறது. இதற்கு ஆஜராக வந்திருக்கும் நேரத்தில் தான் தண்ணீர் பாட்டிலில் ஆசிட் வைத்து மனைவி மீது தாக்கியுள்ளார் சிவகுமார். மேலும் இதனை தடுக்க வந்த வழக்கறிஞர் ஒருவர் மீது பட்டு அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிவகுமாருக்கு என்ன நடக்கும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.