பயணிகளுடன் சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய பேருந்து.. பரபரப்பு!

By Nandhinipriya Ganeshan Updated on :
பயணிகளுடன் சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய பேருந்து.. பரபரப்பு!Representative Image.

கடந்த ஒருவாரமாகவே சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அவ்வாறு, மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையில், திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியிருந்துள்ளது. இதனால், அப்பகுதியில் செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு அரசு பயணிகள் பேருந்து அவ்வழியே சென்றுள்ளது. அப்போது, அங்கு தேங்கியிருந்த மழைநீரில் சிக்கிக்கொண்டது.  

டிரைவர் முயற்சித்தும் பஸ் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. இதனால், பயணிகள் அச்சமடைய உடனே அந்த இடத்திற்கு வந்த போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை கயிறு கட்டி இழுத்து மீட்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர்பான செய்திகள்