வாங்காத பொருட்களுக்கு பில்...ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை!

By Priyanka Hochumin Updated on :
வாங்காத பொருட்களுக்கு பில்...ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை!Representative Image.

ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டதாக புகார் வந்துள்ளது. மேலும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் அப்படி செய்த ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரேஷன் பொருட்கள் சரியாக மக்களுக்கு போய் சேர்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ள, ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய PoS எனப்படும் விற்பனை முனையக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடையில் குடும்பத்தினர் ஒருவரின் கை ரேகை பதிவு செய்யப்பட்ட பின்னரே அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும். மேலும் அவர்கள் கேட்கும் பொருட்களுக்கு மட்டுமே பில் போடப்படும்.

இது குறித்து தெளிவான விளக்கங்களை விற்பனையாளர்களுக்கு பல முறை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி சில இடங்களில் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பொது மக்கள் அளித்த புகாரில் அடிப்படையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின் போது போலி பில் போடப்பட்டதைக் கண்டறியப்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்பான செய்திகள்