அண்ணாமலை வெறும் வாய் வார்த்தை தான், துணிச்சல் இருந்தால் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள் பார்க்கலாம்!

By Priyanka Hochumin Updated on :
அண்ணாமலை வெறும் வாய் வார்த்தை தான், துணிச்சல் இருந்தால் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள் பார்க்கலாம்! Representative Image.

வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழகத்தின் முன்னணி கட்சிகள் கூட்டணி அல்லது தனித்துவமாக போட்டியிட பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதில் திமுக கட்சியினர் கூட்டணி கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்துள்ளனர். மற்ற கட்சிகள் வேட்பாளர் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியிடவில்லை. இச்சமயத்தில் விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். 

அண்ணாமலை வெறும் வாய் வார்த்தை தான், துணிச்சல் இருந்தால் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள் பார்க்கலாம்! Representative Image

அவர் கூறியது - ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்தது நல்ல முடிவு. அது மட்டும் இன்றி எந்த தேர்தலாக இருந்தாலும் கட்சியின் அமைச்சர்கள் தங்கள் வேலைகளை செய்து தான் வருகின்றனர். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வெறும் வார்த்தையில் மட்டும் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஏனெனில் அவர் முடிவு செய்திருந்தால் வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணியாகவோ அல்லது தனித்தோ போட்டியிட்டிருக்கலாம் என்று தனது கருத்தை கூறியுள்ளார். 

அண்ணாமலை வெறும் வாய் வார்த்தை தான், துணிச்சல் இருந்தால் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள் பார்க்கலாம்! Representative Image

அதே போல் விருதுநகர் பட்ஜெட் பற்றி கேள்வி எழுப்புகையில் - இந்த பட்ஜெட் தாக்கல் தான் பாஜகவிற்கு கடைசி பட்ஜெட் தாக்கலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார். மேலும் வரும் பட்ஜெட் தாக்களிலாவது விருதுநகர் மாவட்ட திட்டங்களுக்கு ஏற்ற நிதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.   

தொடர்பான செய்திகள்