இனிப்பான தேனை சேகரித்தாலும் தேனீக்களின் கொடுக்கிலும் விஷம் இருக்கும். அதனாலையே தேன் எடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் எடுப்பார்கள். பொதுவாக தேனீக்கள் கொட்டினால் உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும்.
அந்த இடம் முழுவதும் வீங்கி சரியாகவே சிறிது நாட்கள் எடுத்துக்கொள்ளும். ஒருசில தேனிக்கள் கொட்டினால் உயிரே கூட போய்விடும். அந்தளவிற்கு தேனீக்கள் ஆபத்தானவை. ஆனால், இவ்வளவு கொடுமையான வலி காதுக்குள் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு சம்பவம் தான் வேலூரில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மோகன்பாபு என்ற மாணவன் அப்பகுதியில் தேன் எடுப்பதற்காக சென்றுள்ளான். அப்போது மாணவனின் காதுக்குள் தேனீ ஒன்று புகுந்துள்ளது. காதுக்குள் சென்ற தேனீ மாணவனின் நன்றாக கொட்டியுள்ளது.
இதனால், வலியால் துடித்துள்ளான். உடனே குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, மாணவனின் காதுக்குள் உயிருடன் இருந்த தேனீயை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.