எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்.. மருத்துவ அறிவியல் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை!!

By Editorial Desk Updated on :
எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்.. மருத்துவ அறிவியல் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை!!Representative Image.

தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று திமுக அரசு செயல்படுவதாக மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்த பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் காது, மூக்கு, தொண்டை, தலை & கழுத்து மருத்துவ அறிவியல் மாநாட்டை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். 

அப்போது பேசிய ஸ்டாலின், “முத்தமிழ் பேரவையில் தமிழிலே மருத்துவ விழா நடைபெறுவது பெருமைக்குரிய விஷயம். தமிழகத்தில் நிர்வாகம், பள்ளி, கோவில் என எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று அரசு செயல்படுகிறது. தொழிற்படிப்புக்கான நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. 

கல்வி மற்றும் மருத்துவம் போன்றவை சேவைத் துறையாகவே இயங்கிட வேண்டும். எந்த விதமான நோயையும் குணப்படுத்தும் வசதி தமிழ்நாட்தில் உள்ளது. திறமையான மருத்துவர்கள் சென்னையில் தான் உள்ளனர்.” என்று கூறினார்.

தொடர்பான செய்திகள்