2023-24 ஆம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டில் மக்களுக்கு நன்மை அளிக்கும் பல திட்டங்களை மேயர் பிரியா வெளியிட்டுள்ளார். அதில் மக்களைத் தேடி மேயர் திட்டம் இன்று [மே 5, 2023] முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆகவே, மேயர் பிரியா சென்னை வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார். மேலும் மனுவில் தெரிவித்த பிரச்சனைகள் உடனடியாக சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். எனவே, அப்பகுதி மக்கள் மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்குகள் அமைப்பது, சாலை வசதி, கழிப்பிட வசதி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தொடர்பாக, குப்பைகளை அகற்றுவது, சொத்துவரி, தொழில்வரி தொடர்பாக இருக்கும் பிரச்சனைகள் குறித்து மனு அளிக்கலாம்.
இத்திட்டத்தின் மூலம் மேயரை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை கூறி மக்கள் பயன் பெறுமாறு மாநகராட்சி சார்பிலும் அறிவிப்பு அளிக்கப்பட்டுள்ளது.