பாஜக ஊராட்சி மன்ற தலைவர் கொடூரக் கொலை..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..

By Gowthami Subramani Updated on :
பாஜக ஊராட்சி மன்ற தலைவர் கொடூரக் கொலை..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..Representative Image.

பாஜக பிரமுகரான ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர், கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர். இவருக்கு வயது 42. இவர் சென்னையில் பிரபல ரவுடியான இவர், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்சி எஸ்டி மாநில பொருளாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் சென்னை கொளத்தூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின், காரில் பூவிருந்தவல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று, நாட்டு வெடி குண்டை வீசியுள்ளது.

இதனையடுத்து, காரில் இருந்து தப்பி முயன்ற போது சாலையில் எதிர்திசையில் ஓடியுள்ளார். அப்போதும், அவரை விடாமல் துரத்தி அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. மேலும், அங்கு பங்கியிருந்த மற்றொரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் அவரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

தொடர்பான செய்திகள்