
முன்னாள் எம்.எல்.ஏவும், அமமுக அமைப்பு செயலாளருமான கே.கே.சிவசாமி, அதிமுக-வில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்தார்.
அதிமுகவில் இரட்டைத் தலைமைப் பிரச்சனைத் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்னர், அதிமுகவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நபர்கள் இணைந்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்தவர்கள், இடைக்கால பொதுச்செயலாளராக விளங்கும் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்து வருகின்றனர்.
அதே சமயம், பாஜக கட்சியில் இருந்து விலகி சில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில், தற்போது அமமுக அமைப்பு செயலாளரான கே.கே.சிவசாமி, தற்போது அதிமுக-வில் இணைந்துள்ளார். இது கட்சி வட்டாரங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.