எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன தல அஜித்...

By Nandhinipriya Ganeshan Updated on :
எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன தல அஜித்... Representative Image.

அதிமுக-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அவருக்கு பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக மீது தனி பாசம் கொண்ட அஜித்குமார், நேரடியாக ஆதரவு கொடுக்காமல் இதுபோன்று மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதா மறைந்த சமயத்தில் அஜித் தான் அடுத்த அதிமுக தலைமை எனவும் பேசப்பட்டது. அந்த அளவிற்கு அஜித்குமார் - அதிமுகவினர் இடையே நல்ல நட்பு இருக்கிறது.

தொடர்பான செய்திகள்