
கடந்த சில நாள்களாகவே, பால் கொள்முதல் மற்றும் தொழிலாளர்கள் பற்றாகுறை போன்றவற்றால் பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், சென்னை அம்பத்தூர் பகுதியில் ஆவின் பால் பண்ணையில் இயந்திரக் கோளாறு காரணமாக பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொறியியல் பிரிவு உதவி பொது மேலாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதில், சென்னை அம்பத்தூர் பண்ணையில் இருந்து விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டு போய் உள்ளது. இது தொடர்பாக விசாரித்ததில், எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் பால் பவுடர் சரியாகக் கலக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாக, பால் பாக்கெட்டில் பவுடராக காணப்பட்டது. இதனைப் பொதுமக்கள் வீட்டிற்குச் சென்று பார்த்து விட்டு கடைகளில் பால் பாக்கெட்டுகளை திருப்பி கொடுத்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.