வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை.! பட்டப்பகலில் நடந்த கொடூரம்..

By Gowthami Subramani Updated on :
வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை.! பட்டப்பகலில் நடந்த கொடூரம்..Representative Image.

வீட்டில் பட்டப்பகலில் தனியாக இருந்த பெண்ணைக் கழுத்தறுத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் அருகே உள்ள கரப்பாளையம் புதூரில், வீட்டில் தனியாக இருந்த 54 வயதுடைய தங்கமணி என்ற பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில், பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட நிலையில் தங்கமணி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். ஆனால், வீட்டில் பணம், நகை எதுவும் திருட்டு போகவில்லை எனவு கூறப்படுகிறது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்பான செய்திகள்