விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தால் பெண் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வி.ராமலிங்கபுரத்தில் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பெண் ஒருவர் உடல் கருகி பலியாகி உள்ளார். கடந்த சில நாள்களாகவே, இடியுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்நிலையில், இடி காரணமாக பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த புஸ்பம் என்ற 55 வயது பெண் உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து, வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.