பைக்கில் லிப்ட் கேட்டு, வழிப்பறி செய்து வண்டி, செல்போன், நகைகளைப் பறித்த கும்பலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெர்னான்டஸ். இவர், கடந்த வியாழக்கிழமை அன்று இரவில் பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அருள்புரம் அருகே சென்று கொண்டிருந்த சமயத்தில், ஒருவர் லிப்ட் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அவரது இரு சக்கர வாகனம் பெட்ரோல் நடுவழியில் தீர்ந்து விட்டதால் அந்த இடத்தில் தன்னை இறக்கி விடுமாறு கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து லிப்ட் கொடுத்த பெர்னான்டஸ், பாச்சாங்காட்டுபாளையம் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தர். அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் தடுத்து நிறுத்தி பெர்னான்டஸைத் தாக்கி ரூ.20,000-ம் மதிப்புள்ள செல்போன், ரூ.1000 பணம், இருசக்கர வாகனம் போன்றவற்றைப் பரித்துக் கொண்டு விரட்டியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பி, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் பெர்னாண்டஸ். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் சந்தோஷ் குமார், சிவக்குமார் உள்ளிட்ட 2 பேரைக் கைது செய்தனர். வழிப்பறியில் தொடர்புடைய மேலும் இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.