
இந்திய பிரதமர் மோடி அவர்கள், நோபல் பரிசை வெல்லத் தகுதியானவர் என பரிசுக் குழுவின் துணைத் தலைவர் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு, நோபல் பரிசுக் குழுவின் துணைத்தலைவரான ஆஷ்லே டோஜே பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில் அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியான நபர் எனவும், நான் மோடியின் மிகப்பெரிய ரசிகர் எனவும் கூறியுள்ளார்.
இவர், மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போரினை நிறுத்துவதுடன், அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்டவராவார் எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் அதிகமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், மோடி செயல்படுத்தும் கொள்கைகளால் இந்தியா பலமான மற்றும் செழிப்பான நாடாக மாறிவருகிறது. பிரதமர் மோடி அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு கொடுக்கப்பட்ட வரலாற்றுத் தருணமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.