இந்தியாவின் 2023 - 24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெறுகிறது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அனைத்து துறைகளுக்கு ஏற்றவாறு நிதியை பிரித்து தரும் நோக்கில் தாக்கல் செய்திருக்கிறார். அதன் அடிப்படையில் பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இதில் பொது மக்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அரசாங்கத்தின் குறிப்பிட்ட துறைகளின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் நிரந்தர கணக்கு எண் (பான்) ஒரு வணிக அடையாளங்காட்டியாக மாற்றப்படும் என்று கூறினார். இந்த முடிவு வணிகங்களின் இணக்கச் சுமையை குறைக்கும் என்றும் கூறியுள்ளார்.
தனி நபரின் அடையாளங்காடியான PAN-ஐ பயன்படுத்தி மத்திய மற்றும் மாநிலத் துறைகளின் ஒருங்கிணைந்த அமைப்புகள் பொதுவான தகவல் மற்றும் ஆவணங்கள் பெறப்படும் வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் மக்கள் மீண்டும் மீண்டும் அவர்களின் ஆவணங்களை சமர்பிப்பதில் இருந்து விடுவிக்கிறது. அது மட்டும் இன்றி வணிகத் தன்மையை எளிதாக்க 39,000க்கும் மேற்பட்ட இணக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் 3,400க்கும் மேற்பட்ட சட்ட நடவடிக்கைகள் குற்றமற்றவை என்றும் கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.