நேபாளத்தில் தொடர்ந்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சமீபத்தில் ஏற்பட்ட துருக்கி நிலநடுக்கத்தால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், நேற்று இரவு நேபாளத்தில் தொடர்ந்து இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், முதல் நிலநடுக்கம் இரவு 11.58 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், 4.8 ஆக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கம் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஏற்பட்டது எனவும், 5.9 ரிக்டர் அளவில் பதிவானது எனவும் தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.