இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் மெட்ரோ கேரளாவில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதனை நாளை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
தென்னிந்தியாவில் இயற்கை வளம், நீர் நிலைகள் அதிகம் உள்ள மாநிலமாக கேரளா திகழ்கிறது. இந்நிலையில் கொச்சி நகருக்கு நகருக்கு பயனளிக்கும் வகையில் வாட்டர் மெட்ரோ அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த திட்டம் நேரந்தவறாமை, நம்பக தன்மை, சவுகரியம், வசதி, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு நன்மை அளிக்கும் வகையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.