ஆந்திராவில் நடந்த நெகிழ்ச்சி சமத்துவம்...கடின மழையிலும் கொண்டுவரப்பட்ட இதயம்...மறுபிறவி எடுத்த சிறுமி!

By Priyanka Hochumin Updated on :
ஆந்திராவில் நடந்த நெகிழ்ச்சி சமத்துவம்...கடின மழையிலும் கொண்டுவரப்பட்ட இதயம்...மறுபிறவி எடுத்த சிறுமி!Representative Image.

திருப்பதி தேவஸ்தான குழந்தைகள் இதய நல மருத்துவமனையில் ஐந்தரை வயது சிறுமிக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து அந்த சிறுமிக்கு மறுபிறவியை அளித்துள்ளனர்.

திருப்பதி தேவஸ்தானத்தில் பத்மாவதி குழந்தைகள் இதய நல மருத்துவமனை முற்றிலுமாக குழந்தைகளுக்கு ஏற்படும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது . அந்த மருத்துவமனையில் இதுவரை இரண்டு குழந்தைகளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்நிலையில், திருப்பதி மாவட்டம் ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்தரை வயது சிறுமி கடந்த மூன்று ஆண்டுகளாக இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் காத்துக்கொண்டிருக்கிறார். இந்த தருணத்தில் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மூளை சாவு அடைந்த மாணவனின் இதயம் தேவஸ்தான மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தொடர்பான செய்திகள்