ஸ்ரீராம நவமி விசேஷ வழிபாடு...திடீரென தீப்பற்றி எரிந்த கோவில்...அதிர்ச்சி காட்சிகள்!

By Priyanka Hochumin Updated on :
ஸ்ரீராம நவமி விசேஷ வழிபாடு...திடீரென தீப்பற்றி எரிந்த கோவில்...அதிர்ச்சி காட்சிகள்!Representative Image.

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென கோவிலில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

இன்று ஸ்ரீராம நவமி என்பதால் இந்தியா முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறும்.  பக்தக்கொடிகள் இறைவனை தரிசித்து மகிழ்வார்கள். ஆனால் ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனகு மண்டல் துவா பகுதியில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடைகாலம் என்பதால் பக்தர்களின் நலனுக்காக பனை ஓலை நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

திடீரென பந்தல் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. அங்கிருந்த பக்தகொடிகள் தீயை அணைக்க முயற்சிக்கும் போது கோவில் முழுவதும் தீ பரவ ஆரம்பித்துள்ளது. எனவே, கோவிலுக்குள் இருந்த பக்தர்கள், கோவில் நிர்வாக ஊழியர்கள் அனைவரும் தப்பிக்க முயற்சித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் தீயனைக்கும் முயற்சில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்பான செய்திகள்