முன்னால் முதல்வர் மரணம்… அதிர்ச்சியில் மக்கள்..!

By Gowthami Subramani Updated on :
முன்னால் முதல்வர் மரணம்… அதிர்ச்சியில் மக்கள்..!Representative Image.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பிரகாஷ் சிங் பாதல் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். இவர், முதலில் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்து பின்பு, சிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

இவர், தனது அரசியல் வாழ்க்கையில் பிரகாஷ் சிங் பாதல் 13 மாநில சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு, 11 முறை வெற்றி பெற்றவர் ஆவார். மேலும், 1969 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடையே நடந்த 10 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், 95 வயதான இவருக்கு மூச்சு விடுவிடுவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் நேற்று இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்பான செய்திகள்