யூடியூப் பார்த்து கோடி கோடியாய் கொள்ளையடித்த மாணவர்கள்…!

By Gowthami Subramani Updated on :
யூடியூப் பார்த்து கோடி கோடியாய் கொள்ளையடித்த மாணவர்கள்…!Representative Image.

யூடியூப் பார்த்து கோடி கோடியாய் கொள்ளையடித்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஓம் பிரகாஷ். மர்ம நபர்கள் நான்கு பேர் இவரது வீட்டில் புகுந்து மனைவி, மகள் போன்றோரைக் கட்டிப் போட்டுள்ளனர். இதில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, அவர்களிடம் இருந்து லாக்கர் சாவியைப் பெற்று, பீரோவில் இருந்த 1 கோடி மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த விசாரித்த போது பாலிடெக்னிக் மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அவர்களிடம் இருந்து 36 லட்சம் ரொக்கம் மற்றும் 65 லட்சம் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் விசாரணை நடத்தியதில் மாணவர்கள் யூடியூப் பார்த்து வீடியோ பார்த்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது வெளிவந்தது.

தொடர்பான செய்திகள்