
இழந்த மகனின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதால் கல்லறையில் "க்யூ.ஆர்.கோட்-ஐ" பதித்துள்ளனர்.பெற்றோர்களின் இந்த செயல் கேள்விப்படுபவர்களுக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் குரியாச்சிராவைச் சேர்ந்த தம்பதிகள் பிரான்சிஸ் மற்றும் லீனா. இவர்கள் தங்கள் மகன் ஐவீன் பிரான்சிஸ் உடன் மேற்காசிய நாடான ஓமனில் வசித்து வருகின்றனர். மருத்துவ கல்லூரியில் படிக்கும் ஐவீனுக்கு இசை மற்றும் விளையாட்டில் அதிக ஈர்ப்புடன் இருந்தார். எனவே, கடந்த 2021 ஆம் ஆண்டு பேட்மிட்டன் விளையாடும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார். தங்கள் மகனின் இறப்பை தாங்க முடியாமல் மிகவும் தவித்தனர் பிரான்சிஸ் மற்றும் லீனா.
மறைந்த தங்கள் மகனை சொந்த ஊரான குரியாச்சிரா பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் சர்ச் கல்லறையில் அடக்கம் செய்தனர். பின்னர் மிகுந்த மன வேதனையில் இருந்த அவர்கள் ஐவீனின் சகோதரி ஈவ்லின் பிரான்சிஸ் இன் யோசனையால் இணையதளம் ஒன்றை உருவாக்கினர். அதில் ஐவீன் பற்றிய அனைத்து விவரங்கள், புகைப்படங்கள், பாடல் பாடும் வீடியோக்கள் என்று அனைத்தும் அதில் பகிரப்பட்டுள்ளது. மேலும் தங்கள் மகனின் வாழ்க்கை வரலாறு மற்றவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டும் என்று நினைத்து கல்லறையின் மேல் க்.யூ.ஆர்.கோட்-ஐ பதித்துள்ளனர். அதனை ஸ்கேன் செய்து நாம் முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.