கனமழை வெளுக்கப்போகுது.. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..

By Nandhinipriya Ganeshan Updated on :
கனமழை வெளுக்கப்போகுது.. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..Representative Image.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், கேரளாவில் உள்ள சில பகுதிகளில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள 3 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை எடுத்துள்ளது. 

அதன்படி, கேரளாவில் உள்ள எர்ணாகுளம், பாலக்காடு, மற்றும் இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், கன மழை தொடரும் என்பதால் அந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்பான செய்திகள்