
இணையதளத்தில் போட்டோஷூட் ஒன்று வைரலாகி வருகிறது. இதில், மாமியார், அம்மா, பாட்டி போன்றோர் போட்டோ ஷூட்டில் இடம் பெற்றுள்ளனர். இந்த போட்டோஷூட்டைப் பார்த்ததும், யார் சரியாக கர்ப்பமாக இருக்கிறார்கள் என்று அனைவரும் சிந்திக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த போட்டோஷூட் உண்மை இல்லை. உண்மையில், இந்த போட்டோஷூட் ஆனது மகப்பேறு புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே எனவும், அந்தப் பெண் மட்டுமே கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண்ணின் அம்மா, பாட்டி, மாமியார் போன்றோர் வயிற்றில் தலையணை வைத்து போட்டோஷூட் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜிபின் எனும் புகைப்படக்காரரின் மனைவி சிஞ்சு என்பவர் தான் கர்ப்பமாக இருந்தது. இதனையடுத்து, ஜிபின் தனது மனைவிக்காக, மகப்பேறு புகைப்படம் எடுக்க முடிவு செய்தார். அப்போது அவர் போட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்த போது இந்த யோசனை வந்ததாக கூறப்படுகிறது. இந்த போட்டோ ஷூட் ஆனது, சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.