வீடியோ பார்த்துக்கொண்டிருந்த சிறுமி...போன் வெடித்து பலி | Kerala Phone Explosion

By Priyanka Hochumin Updated on :
வீடியோ பார்த்துக்கொண்டிருந்த சிறுமி...போன் வெடித்து பலி | Kerala Phone ExplosionRepresentative Image.

கேரளாவில் சிறுமி வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் போது போன் வெடித்து சிதறியதால் பலி.

கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தின் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார். இவரின் மனைவி கூட்டுறவு வங்கியின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர்களின் 8 வயது மகள் ஆதித்யா ஸ்ரீ அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு வருகிறார். அவர் நேற்று இரவு 10.30 மணியளவில் போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக செல் போன் வெடித்து சிதறியதால் சிறுமி சம்பவ இடத்திலையே அநியாயமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து போன் வெடித்ததற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அதிக நேரம் செல் போன் பயன்படுத்துவதை தவிக்க வேண்டும்.

தொடர்பான செய்திகள்