
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுலா விமானம் குடியிருப்பு வீட்டில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்த முழு விவரமும் இதோ.
பாட்னாவைச் சேர்ந்த ஒருவர் தன்பாத் மாவட்டத்தில் இருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது விமானத்தில் இருந்து நகரத்தைப் பார்க்க கிளைடர் விமான சவாரி செய்யலாம் என்று தீர்மானித்துள்ளார். எனவே, தனியார் நிறுவனம் நடத்தப்படும் அந்த சேவையில் விமானி மற்றும் சுற்றுலா பயணி இருவர் மட்டுமே போக முடியும். இவரும் விமானியும் கிளைடர் விமானத்தில் சென்றுள்ளனர். நகரின் அழகை ரசிக்க பயணி வீடியோ எடுக்க, வானில் பறந்த விமானம் சிறிது நேரத்தில் ஒரு குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த பயணி மற்றும் விமானியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளரிடம் கேட்கும் போது, நாங்கள் எதிர்பார்க்காத சமயத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. எங்கள் குடும்பத்தில் யாருக்கும் எந்த அடியும் ஏற்படவில்லை. மேலும் என்னுடைய இரண்டு வயது குழந்தை நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.