வயலில் வேலை செய்யும் போது....மின்னல் தாக்கி 14 பேர் பலி!

By Priyanka Hochumin Updated on :
வயலில் வேலை செய்யும் போது....மின்னல் தாக்கி 14 பேர் பலி!Representative Image.

மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
நேற்று மேற்கு வங்காளத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததாக பதிவாகியுள்ளது. அதில் பெரும்பாலும் கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட தெற்கு வங்காள மாவட்டங்களில் தான் மழை பெய்தது.
இதில் புர்பா பர்தமான் மாவட்டத்தில் 4 பேரும், முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் 2 பேரும், மற்ற மாவட்டங்களில் 8 பேரும் என்று மொத்தம் 14 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் விவசாயிகள், வயலில் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தொடர்பான செய்திகள்