மந்திரவாதி கூறியதால் 7 வயது சிறுமி நரபலி...காரணம் தெரிஞ்சா கொலவெறி ஆகிடுவீங்க!

By Priyanka Hochumin Updated on :
மந்திரவாதி கூறியதால் 7 வயது சிறுமி நரபலி...காரணம் தெரிஞ்சா கொலவெறி ஆகிடுவீங்க!Representative Image.

மனைவிக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைத்து 7 வயது சிறுமியை நரபலி கொடுத்த சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்த ஆதரிசிகரமான பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

கொல்கத்தா தில்ஜலா பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்த 7 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதால் பெற்றோர்கள் பதறிப்போயினர். உடனே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த குழந்தையின் அக்கம் பக்கத்து வீட்டை சோதனை செய்யும் போது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காணாமல் போன 7 வயது சிறுமி அலோக்குமார் என்பவரின் வீட்டில் சாக்கு மூட்டையில் இறந்த நிலையில் கிடந்துள்ளர்.

உடனே அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அலோக்குமாரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையின் போது அலோக்குமார் கூறியது, தன்னுடைய மனைவி ஏற்கனவே 3 முறை கர்ப்பமாகி குழந்தை அபார்ட் ஆகியுள்ளது. தற்போது மீண்டும் தன்னுடைய மனைவி கர்பமாக இருக்கிறார். இந்த முறை எந்த சிக்கலும் இன்று நல்ல படியாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று மந்திரவாதியின் உதவியை நாடியுள்ளார். அப்போது அவர் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்றால் நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பின்னர் அவர் வீட்டிற்கு வரும் போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை பார்த்த உடன் அவரை கடத்தி நரபலி கொடுத்ததாக கூறியுள்ளார். இதனை தெரிந்து கொண்ட அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகினர். இதற்கு காரணமான அலோக்குமாரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டம் அப்படியே வன்முறையாக மாறியுள்ளது. பல போராட்டங்களுக்கு பின்னர் போலீசார் வன்முறையை தடுத்து நிறுத்தியுள்ளார். தனக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக மற்றவரின் அன்பு மகளை நரபலி கொடுத்த சம்பவத்தால் கொல்கத்தா மட்டும் அல்லாது நாடே மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

தொடர்பான செய்திகள்