2023 - 24 நிதியாண்டு பட்ஜெட்டில் விவசாயக் கடன் 20 லட்சம் கோடி இலக்கு | Budget Thakkal in Tamil

By Priyanka Hochumin Updated on :
2023 - 24 நிதியாண்டு பட்ஜெட்டில் விவசாயக் கடன் 20 லட்சம் கோடி இலக்கு | Budget Thakkal in TamilRepresentative Image.

இந்திய நாட்டின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தக்கலை இன்று நிர்மலா சீதாராமன் தெரிவித்து வருகிறார். அதில் விவசாயிகளுக்கு என்று 20 லட்சம் கோடி ஒதுக்குவதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா நெருக்கடிக்கு பிறகு நம் நாட்டில் நடைபெறும் முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் இதன் மீது மக்களின் கவனம் அதிகமாகவே இருக்கிறது. மேலும் இந்த ஆண்டில் தங்களுக்கு சாதகமாக நிதி அமையுமா என்று மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஆண்டு இந்தியாவில் வேளாண் துறை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவைத் தொடர்ந்து கனமழை, பருவமழை என்று மாற்றி மாற்றி அவர்களுக்கு நஷ்டத்தை தந்துள்ளது. எனவே, தங்களின் உழைப்பிற்கும், வயலில் விளைந்த உணவுப் பொருளைகளுக்கும் நஷ்ட ஈடு வழங்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு வேளாண் துறைக்கு துன்று 18 லட்சம் கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் 2 லட்சம் கோடி அதிகரித்து 20 லட்சம் கோடி விவசாயக் கடன் அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்பான செய்திகள்