
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் அடுத்து நடத்தப்போகும் போராட்டங்கள் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 26 ஆம் தேதி முதல் விவசாயத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேலானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது சம்மந்தமாக விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இருப்பினும் அது பயனளிக்காததால் போராட்டத்தை கை விடாமல் விவசாயிகள் தொடர்கின்றனர்.
பல மாதங்கள் ஆகியும் அரசாங்கம் எந்த ஒரு ஒப்பந்தத்திற்கு வராததால் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக விவசாய சங்கத் தலைவர் அறிவித்துள்ளார். அதனால் டெல்லியில் ஜெய்ப்பூர் - டெல்லி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற சாலைகளையும் மறித்து அதிரடியாக போராட்டத்தை கையாள்வோம் என்று பாரதிய கிசான் சங்கத் தலைவர் பல்வீர் சிங் ரஜேவால் தெரிவித்தார்.
அதற்கு பின்னர் பாஜக தலைவர்களின் வீடுகளில் புகுந்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆனால் ரயில்களை மறித்து போராட்டம் நடைபெறாது எனவும் அவர் தெரிவித்தார்.