
பயங்கர தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக 6 பேர் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சொப்னலோக் என்ற பகுதியில் பிரபல வணிக வளாகம் ஒன்றி, ஏராளமான குடோன்கள் மற்றும் கடைகள் போன்றவை செயல்பட்டு வருகின்றன. இந்த வணிக வளாகமானது 8 மாடிகள் கொண்டதாகவும், சுமார் 3,000-ற்கும் அதிகமானோர் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை அன்று காலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்சார வயர்கள் மூலம் தீயானது வேகமாகப் பரவி ஐந்தாவது மாடியிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் அலறியடித்த படி அங்கிருந்து வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் வேகமாக வந்து தீயை அணைக்கப் போராடினர். மேலும், மாடியில் சிக்கியவர்கள் ஹைட்ராலிக் கிரேன் மூலம் மீட்கப்பட்டனர். இதில், பலரது நிலைமை மோசமான நிலையை அடைந்தது. இதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.