அடி தூள்.. அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எவ்வளவு தெரியுமா? | DA Hike

By Nandhinipriya Ganeshan Updated on :
அடி தூள்.. அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எவ்வளவு தெரியுமா? | DA HikeRepresentative Image.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் தொகையை 'அகவிலைப்படி' என்பர். அதிகரித்து வரும் விலைவாசி சூழலுக்கு ஏற்ப இந்த தொகை வழங்கப்படுகிறது. இது ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் ஒரு நிலையான சதவீதமாக கணக்கிடப்படுகிறது. இந்த விகிதம் வருடத்திற்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படும். அகவிலைப்படி அதிகரிப்பு செலவின அடிப்படையில் அரசிற்கு சுமையாக இருந்தாலும், இந்த முடிவு பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். 

அந்தவகையில், சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இது ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, பணியாளரின் அகவிலைப்படி 42 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இந்த அகவிலைப்படி உயர்வு, ஜனவரி முதல் ஜூன் வரை வரும் AICPI-IW குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது. அதன்படி, ஜனவரி 2023 முதல் பிப்ரவரி மாதம் வரை அகவிலைப்படி குறியீட்டு அடிப்படையில் 43.97 ஐ எட்டியுள்ளது. இப்போது அடுத்த எண் அதாவது மார்ச் மாதத்தின் எண்ணிக்கை ஏப்ரல் 28 மாலை வெளியிடப்படவுள்ளது. 

தொடர்பான செய்திகள்