பிரபல பாடகியின் தாயார் மரணம்..! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!

By Gowthami Subramani Updated on :
பிரபல பாடகியின் தாயார் மரணம்..! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!Representative Image.

பிரபல பாடகியின் தாயார் மரணமடைந்தது திரையுலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாடகியான சுதா ரகுநாதனின் தாயார்  சூடாமணி கர்நாடக இசை கலைஞர் ஆவார். இவர் தன்னுடைய மகளுக்கு ஆரம்ப காலம் முதலே இசையைப் பயிற்றுவித்தார். இசை மீதான ஆர்வத்தை தூண்டினார். தற்போது, எட்ட முடியாத உயரத்தில் நிற்கிறார் சுதா ரகுநாதன்.

தாயாரிடம் பெற்ற கலையால், பின்னாளில் கலைமாமணி, பத்மபூஷண், பத்ம ஸ்ரீ, சங்கீத சரஸ்வதி, சங்கீத கலாநிதி போன்ற பல விருதுகளைப் பெற்றார். கர்நாடக இசையைத் தாண்டி, படத்தின் மூலம் இளையராஜா இசையின் திரையுலகிலும் பாடகியாக அறிமுகமானார் சுதா ரகுநாதன்.

இந்நிலையில், சுதா ரகுநாதனின் தாயாரான சூடாமணி இன்று மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. இவரது மரணத்திற்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்பான செய்திகள்