பட்ஜெட் 2023 - எது மலிவானது? என்ன விலை அதிகமாகிறது?

By Priyanka Hochumin Updated on :
பட்ஜெட் 2023 - எது மலிவானது? என்ன விலை அதிகமாகிறது?Representative Image.

ஒவ்வொரு நிதியாண்டின் பட்ஜெட் தாக்கலின் போது நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் மாற்றங்கள் ஏற்படும். இது இந்திய மக்கள் என்ன பொருள் வாங்கினாலும் அதில் சில பகுதி வரி பணமாக செலுத்தப்படும். ஆனால் பாஜக ஆட்சியை பிடித்த உடன் ஜி.எஸ்.டி என்ற வரி செலுத்தும் முறையை அமல் படுத்தினார். அப்படி நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்று வெளியிடும் ஐந்தாவது பட்ஜெட் தாக்கல் தான் இந்த 2023 - 24 ஆண்டிற்கான பட்ஜெட்.

இதில் சில பொருட்களின் வரி குறைவாகவும், அதிகமாகவும் மாற்றப்பட்டுள்ளது. அது குறித்த முழு தகவலைப் பற்றி பாப்போம்.

பட்ஜெட் 2023 - எது மலிவானது

டிவி பேனல்களின் ஓபன் செல்களின் பார்ட்ஸ்-களுக்கு சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன் உற்பத்திக்கு தேவையான சில உள்ளீடுகளின் இறக்குமதி மீதான சுங்க வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்கள் தயாரிக்கப் பயன்படும் விதைகள் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இறால் தீவனத்தின் மீதான சுங்க வரி சற்று குறையும் என்று கூறியுள்ளார்.

பட்ஜெட் 2023 - என்ன விலை அதிகமாகிறது

சிகரெட் மீதான வரி 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

கலப்பு ரப்பரின் இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தங்கக் கட்டிகளால் செய்யப்படும் பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.

7.5 சதவீதத்தில் இருந்த சமையலறை மின்சார புகைபோக்கிக்கான சுங்க வரி தற்போது 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொடர்பான செய்திகள்