ஆந்திரா மாநிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த 18 மாத பெண் குழந்தையை கடித்துக் கொன்ற தெரு நாய்கள்.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மெட்டவலச கிராமத்தை சேர்ந்த தம்பதியின் 18 மாத பெண் குழந்தை வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்குள்ள தெரு நாய்கள் அந்த குழந்தையை சுற்றி வளைத்து கடித்து குதற ஆரம்பித்தன. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் நாய்களை விரட்டி குழந்தையை மருத்துவமனையின் அனுமதித்தனர். ஆனால் குழந்தையோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
உலகம் தெரியாத பச்சிளம் குழந்தையை தெரு நாய்கள் கடித்தே கொன்று விட்டது. தங்களின் குழந்தை இப்படி பரிதாபமாக உயிரிழந்து விட்டதே என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்பு கதறி அழும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.