
நிலநடுக்கத்தின் போதும் கடமை தவறாது செய்தி வாசித்த செய்தி வாசிப்பாளரின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர், தொடர்ந்து செய்தி வாசித்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. அந்த வகையில், பாகிஸ்தான் செய்தி வாசிப்பாளர், செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், கேமரா உள்ளிட்ட கருவிகள் ஆடத் தொடங்கியதும் அங்கிருந்த ஊழியர்கள் வெளியேறத் தொடங்கினர். எனினும், செய்தி வாசிப்பாளர் மட்டும் உயிருக்கு அஞ்சாமல் தொடர்ந்து செய்தி வாசித்தார். இவரது வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.