ஆத்தாடி.. வெறும் ஒரு மணி நேரத்துல ரூ.19.35 கோடியா..?

By Nandhinipriya Ganeshan Updated on :
ஆத்தாடி.. வெறும் ஒரு மணி நேரத்துல ரூ.19.35 கோடியா..?Representative Image.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் 1000 கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் பெரும்பாலானோர் திருப்பதிக்கு படையெடுத்து வருகிறார்கள். எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இணையதளங்களில் முன்பதிவு செய்து தரிசிக்கும் முறையை பின்பற்றி வருகிறது.

அந்த வகையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வி ஐ பி தரிசனம், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனம் என பல்வேறு வகையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. இதில் ஒவ்வொரு மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டை திருப்பதி தேவஸ்தானம் முந்தைய மாதமே ஆன்லைனில் வெளியிட்டு வருவது வழக்கம். இதை அனைத்தும் ஆன்லைன் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். 

அப்படி, இன்று காலை 10 மணிக்கு மே, ஜூன் மாதங்களில் வழிபட தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைனில் [https://tirupatibalaji.ap.gov.in/#/login] வெளியிட்டது. அப்படி வெளியிட்ட வெறும் ஒரே மணி நேரத்தில் மொத்த டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்துவிட்டார்களாம். இதனால் தேவஸ்தானத்திற்கு ஒரே மணி நேரத்தில் 19 கோடியே 35 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 

தொடர்பான செய்திகள்